ETV Bharat / state

சிறப்பு ரயில் சேவைகளை அதிகரித்துவரும் தெற்கு ரயில்வே! - நாகர்கோயில்-ஷாலிமார், திருவனந்தபுரம்- ஷாலிமார்

சென்னை: எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

author img

By

Published : Nov 17, 2020, 9:24 PM IST

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்காலிமாக ரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவையை செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து தொடங்க, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமான இயங்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை- அகமதாபாத், நாகர்கோயில்-ஷாலிமார், திருவனந்தபுரம்- ஷாலிமார் இடையேயான சிறப்பு ரயில்கள் வரும் 22ஆம் தேதிமுதல் இயக்கப்டும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 22 ஆம் தேதி முதல் சென்னையிலிருந்து நாள்தோறும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் மாலை 6 மணிக்கு அகமதாபாத்துக்கு இந்த ரயில் சென்றடைகிறது.

அதேபோல் நாகர்கோவிலிருந்து சாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் 2.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.55 மணிக்கு இந்த சிறப்பு ரயில் சென்று சேர்கிறது. இந்த ரயில் சேவையும் 22 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

மற்றொரு ரயில் திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக சாலிமாருக்கு வரும் 28 ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

வார இருமுறை இயக்கப்படும் இந்த ரயில், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் திருவனந்தபுரத்தில் மாலை 4.55 மணிக்குப் புறப்பட்டு சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.55 மணிக்கு ஷாலிமார் சென்றடைகிறது. இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (18.11.20) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.