ETV Bharat / state

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

author img

By

Published : Jan 19, 2022, 10:41 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு
மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் முதுகலை பட்டப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதுநிலை மருத்துவத்தில் எம்டி, எம்எஸ் படிப்புகளில் 2,216 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 1,053 இடங்களும் மாநில ஒதுக்கீட்டில் 1,163 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. மாநில ஒதுக்கீட்டில் உள்ள 1,163 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.

பாராமெடிக்கல் படிப்பு

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் படிப்புகளில் 16,693 இடங்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 58,000 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 16 ஆயிரத்து 486 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். 207 இடங்கள் மட்டும் தற்போது காலியாக உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு ஆன்லைன் மூலம் பாரா மெடிக்கல் படிப்புகளில் மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து உள்ளனர்.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு

எம்பிபிஎஸ் படிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 349 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 2,650 இடங்களும் என 6,999 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ளன. அதேபோல் பிடிஎஸ் படிப்பில் 1,930 இடங்கள் உள்ளன.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சிறப்புப் பிரிவினருக்கான ராணுவத்தினரின் வாரிசுகள் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 27ஆம் தேதி நடைபெறும்.

பிடிஎஸ் படிப்பு

மேலும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு 28, 29ஆம் தேதிகளில் நேரடியாக நடைபெறும்.

இந்தக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் 436 இடங்கள் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கும் சேர்த்து 534 இடங்கள் நிரப்பப்படவுள்ளது.

தரவரிசைப் பட்டியல்

அதனைத் தொடர்ந்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பிற மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு ஜனவரி 30ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

எம்பிபிஎஸ் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 24ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவிகள் புகை பிடிக்கும் காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.