ETV Bharat / state

'தங்கமகன்' மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு: தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து! - khel ratna award

சென்னை: விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான "ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது", தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து!
தமிழ்நாடு ஆளுநர் வாழ்த்து!
author img

By

Published : Aug 24, 2020, 5:00 PM IST

இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேல் இந்தியாவில் விளையாட்டிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். அவரை நினைத்துப் பெருமைப் படுகிறோம். இது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இவரின் மகத்தான சாதனையை அங்கீகரித்து மத்திய அரசு விளையாட்டிற்கான பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதை அவருக்கு அறிவித்தது. மேலும் அதே ஆண்டில் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.

இப்போது இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு கௌரவமான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியா, தமிழ்நாட்டிற்கான போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறுவார். எதிர்காலத்தில் சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக இன்னும் பல தங்கப்பதக்கங்களை வெல்வார்.

இவரின் சாதனை தமிழ்நாட்டிலிருக்கும் பல விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச, ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும். அவரின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனக் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு: முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.