ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு ? அதிகாரிகள் விளக்கம்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்புகள் இடம்பெறுவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விமான நிலைய ஆணையக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு; அதிகாரிகள் விளக்கம்

author img

By

Published : Sep 13, 2022, 7:50 AM IST

சென்னை: உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 450 விமானங்களுக்கு மேல் இயக்கப்படுகின்றன. அதில் நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரத்தில் இருந்து 45 ஆயிரம் வரை பயணிகள் பயணம் செய்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு, வருகை மற்றும் பயணிகள் பாதுகாப்பு சோதனை முடித்து விமானத்தில் ஏறுவதற்கு எந்த கேட் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் விமான நிலையத்தில் உள்ள அறிவிப்பு போா்டுகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன.

சென்னை விமான நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு; அதிகாரிகள் விளக்கம்
சென்னை விமான நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு; அதிகாரிகள் விளக்கம்

இந்த நிலையில் சென்னையில் இருந்து அபுதாபி சென்ற ஒரு பயணி விமான பயணிகள், எந்த கேட் வழியாக விமானத்தில் ஏற செல்ல வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பு இந்தியில் மட்டுமே போா்டில் ஒளிப்பரப்பப்பட்டு உள்ளதாகவும் தமிழ், ஆங்கிலம் வரவில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவலை கண்ட சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். பின்னர் அந்த சமூக வலைதளத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் தகவல் ஒளிப்பரப்பப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கு இடைவெளி நேரம் உள்ளதால் பயணி கவனிக்காமல் இருந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை ஒபன் டென்னிஸ் ... இந்திய வீராங்கனை தண்டி கர்மன் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.