இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறியதாவது, "ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
ரெம்டெசிவிர் மருந்து இன்று காலை 9 மணி முதல் நேரு உள் விளையாட்டு அரங்க ஆண்கள் விடுதியில் வழங்கப்பட உள்ளது. ரெம்டெசிவிர் விநியோகத்திற்காக 4 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக சில மருத்துவர்கள் ரெம்டெசிவிரை பரிந்துரைக்கின்றனர். ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து அல்ல.
சென்னையில் 300 பேருக்கு தினம்தோறும் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட உள்ளன. அரசு மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தாலும் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும்.
ரெம்டெசிவிர் மருந்தை ஒரு நோயாளிக்கு எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனம் தேவை. நோயாளிக்கு ஆரம்ப நிலையிலோ, கடைசி நேரத்திலோ ரெம்டெசிவிர் வழங்குவதால் எந்தப் பலனும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 31,892 நபர்களுக்கு கரோனா!