ETV Bharat / state

கோவை விபத்தில் யாரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது?- அண்ணாமலை - NIA interrogation of Jamesa Mobin

கோவை கார் விபத்தில் யாரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது?. தமிழ்நாடு உள்துறை முற்றிலுமாக தோல்வி அடைந்து உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விபத்தில் யாரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது?- அண்ணாமலை

author img

By

Published : Oct 25, 2022, 4:47 PM IST

Updated : Oct 25, 2022, 5:31 PM IST

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுருவி உள்ளனர்.

விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேடஸ்ஸில் (என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேருங்கள்) என பதிவு செய்துள்ளார். இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம் இது காவல்துறையிடம் உள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பின் தொடர்புடைய விசாரணையில் ஜமேசா மொபின் இடமும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளனர். கோவையில் நடந்த கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான். நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை. அப்படி நடந்து இருந்தால் ஆட்சி கலைக்கப்பட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும்.

கோவையில் நடைபெற்ற வெடி விபத்து தற்கொலை தாக்குதல் தான் என காவல்துறை தயங்குவது ஏன்?. இந்த விவகாரத்தில் தற்போது 5 நபர்களை கைது செய்துள்ள நிலையில் எதற்காக கைது செய்துள்ளோம் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த விவரங்களும் அதில் குறிப்பிடவில்லை.

இந்த விபத்து தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை வெளியிட காவல்துறை மறுப்பது ஏன்?. யாரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது?. தமிழ்நாடு உள்துறை முற்றிலுமாக தோல்வி அடைந்து உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

உள்துறை அதிகாரிகள் செயலிழந்து உள்ளனர். அவர்களை மாற்றிவிட்டு மீண்டும் முந்தைய அதிமுக, திமுக ஆட்சிகளில் இருந்ததை போல நல்ல அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

கோவை விபத்தில் யாரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு முயற்சி செய்கிறது?- அண்ணாமலை

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது குறித்தும் இந்த செய்தி எவ்வாறு திரிக்கபடுகிறது. தமிழ்நாட்டில் கூடுதலாக என்.ஐ.ஏ அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதி உள்ளோம். இரண்டு நாட்களில் தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு ஆளுநரை சந்திக்க உள்ளோம்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:டாஸ்மாக் விற்பனை ரூ.708 கோடி... செந்தில் பாலாஜி எச்சரிக்கை... அண்ணாமலை கேள்வி...

Last Updated : Oct 25, 2022, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.