ETV Bharat / state

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை - BJP state leder Annamalai

மோடி பிரதமராக இருக்கும் போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும்
author img

By

Published : Sep 18, 2021, 8:56 PM IST

சென்னை : பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் பாஜகவின் மாத இதழ் பத்திரிகையான ஒரே நாடு, பாஜக அறிவுசார் பிரிவு சார்பாக சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக அரசின் ஏழு ஆண்டு சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலரை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதனை பாஜக உறுப்பினரும் நடிகர் சிவாஜி கணேசன் மகனுமான ராம்குமார் பெற்றுக்கொண்டார்,

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பல ஆண்டுகள் பிரதமராக இருக்கப் போகும் மோடி இருக்கும்போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி சாதனை மலர் புத்தகம் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய புத்தகம் தான். அறிவுசார்ந்த புத்தகங்களை மக்களிடத்தில் முன் வைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசியல்வாதிகள் கோபாலபுரத்தில் இருந்து go back modi என கூறிக்கொள்ளலாம். ஆனால், எந்த ஒரு குடிமகனுக்கும் மோடியின் பாதுகாப்பு கண்டிப்பாக தேவை. இந்திய இராணுவத்தில் அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய போது 24 மணி நேரம் இந்தியா கெடு விதித்தது. உடனடியாக வாகா எல்லைக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார்.

சீனா, பாகிஸ்தான் பயப்படுகிறார்கள். இந்தியாவை பாதுகாப்பாக வைத்து இருக்கும் தலைவராக மோடி இருக்கிறார். புல்வாமா தாக்குதலின்போது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் அதற்கு தக்க பதிலடி இந்திய அரசு கொடுத்துள்ளது என கூறினார்.

இதையும் படிங்க : ஊரக உள்ளாட்சி தேர்தல் - பார்வையாளர்களாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.