சென்னை: தமிழகத்தின் பல்வேறு 'என் மண் என் மக்கள்' பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை மக்களிடத்தில் நேரடியாக தெரிவிக்கும் வகையில், அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைமை தெரிவித்திருந்தது.
-
தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் வேண்டுகோள். pic.twitter.com/LiQPryMeA9
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் வேண்டுகோள். pic.twitter.com/LiQPryMeA9
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியின் வேண்டுகோள். pic.twitter.com/LiQPryMeA9
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
இந்நிலையில், கடந்த 2023, டிச.27 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின் போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவல் உதவி ஆய்வாளர்களும் சீருடையுடன் பணியில் இருந்தபடியே, தங்களை பாஜகவில் இணைத்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதனால், உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றபட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடைநீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி நேற்று (ஜன.4) உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற முறையில் தமிழக காவல்துறையினருக்கும், தஞ்சை சரக டிஐஜிக்கும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன்.
'என் மண் என் மக்கள்' நடைபயணத்திற்கு இடையூறு செய்ய ஆளுங்கட்சி பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதும்; ஆனால், அவை ஏதும் எடுபடவில்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் நடந்த 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தின்போது, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டதாக கூறி, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் மீது பணியிடைநீக்க நடவடிக்கை எடுத்துள்ளது, தமிழக காவல்துறை.
குறிப்பிட்ட தினத்தன்று, காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவரும், அந்தப் பகுதியில் என்ன நடைபெறுகிறது என்பதை குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்து விட்டார்கள் என்ற தவறான தகவலை, அந்தப் பகுதியில் இருந்து பிறர் பரப்பியதன் அடிப்படையில், இருவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
தமிழக காவல்துறையினர் இயற்கை பேரிடர்கள் காலத்தில் தன்னலமின்றி களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறவர்கள் என்பதை சமீபத்திய சென்னை மற்றும் தென்மாவட்ட கனமழை நேரத்தில் கூட கண்டோம். தமிழக காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டிராவிட்டால், தமிழகம் நிச்சயம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களால், அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது கீழ்மட்ட நிலையிலுள்ள காவல்துறை நண்பர்களே. பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில், காவல்துறையினர் விசாரிப்பது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், அதற்காக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்களை எந்த விசாரணையும் இன்றி பணியிடைநீக்கம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது.
பல கனவுகளோடு சீருடை அணிந்து, இத்தனை ஆண்டுகளாக தங்கள் கடமையில் சிறிதும் தவறாது பொதுமக்களுக்காக உழைத்தவர்களுக்கு கிடைக்கும் பரிசு பணிநீக்கம் என்றால், இளைஞர்கள் நாளை காவல்துறை பணியில் சேர எப்படி முன்வருவார்கள்?
பல ஆண்டுகளாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த தங்கள் பணிகளை திறம்பட செய்து கொண்டிருக்கும் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இரு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மீதான இந்த பணியிடைநீக்கம் நடவடிக்கை மிக அதிகபட்சமானது என்பதால், தஞ்சை சரக மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், தயவு செய்து அவர்கள் இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வைரலாகும் வீடியோவில், பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் பாஜக உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகளிடம் சென்று, எந்த நம்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தால் பாஜகவில் உறுப்பினராக முடியும் எனக் கேட்டுக் கொண்டிருந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: ரம்பாவிடம் குறும்புத்தனம் செய்த ரஜினிகாந்த்? இணையத்தில் வெடித்த சர்ச்சை!