ETV Bharat / state

'அண்ணா பல்கலைக்கு சீர்மிகு அந்தஸ்து வழங்க வழிகை செய்யுங்கள்' - அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்தைப் பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென முன்னாள் மாணவர்கள் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

anna university
anna university
author img

By

Published : May 11, 2020, 12:49 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பழமை வாய்ந்தது. மத்திய அரசு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி, கட்டடக் கலைக் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்கள் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. சிறந்த பேராசிரியர்களும் இங்கு உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் மத்திய அரசு ஐந்து ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அளிப்பதுடன், உலக அளவில் 500 பல்கலைக் கழகத்திற்குள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியும்.

மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தினால் வளாகங்களும் கல்வி, மாணவர் சேர்க்கைப் போன்றவற்றில் சுதந்திரமாகச் செயல்பட முடியும். மேலும், கல்வியின் தரம் சர்வதேச தரத்தில் உயரும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து செயல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கான கடிதம் அளிப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : அறிகுறியின்றி டெல்லியில் பரவும் கரோனா - கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.