ETV Bharat / state

அண்ணா பல்கலை விவகாரம் குறித்து அமைச்சர்கள் கூட்டம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் குறித்து அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.

அமைச்சர்கள் கூட்டம்
அமைச்சர்கள் கூட்டம்
author img

By

Published : Jan 6, 2020, 2:54 PM IST

Updated : Jan 6, 2020, 5:18 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி வழங்குவது குறித்து ஆய்வுசெய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்புத் தகுதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்பதா, வேண்டாமா என தமிழ்நாடு அரசு முடிவு செய்யாத நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி. அன்பழகன், சி.வி. சண்முகம் ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள், உயர் கல்வித் துறை செயலர், சட்டத் துறை செயலர், நிதித் துறை செயலர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், மாநிலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொதுப் பல்கலைக்கழகமாக இருந்துவருவதன் காரணத்தால், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும்கூட, தொடர்ந்து மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும்.

மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து அதற்குப் பொருந்தும் என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வுசெய்வதற்காக, அமைச்சர்கள் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை, அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணா பல்கலை விவகாரம் குறித்து அமைச்சர்கள் கூட்டம்

இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவுசெய்ய அமைச்சர்கள் குழு இன்று மதியம் கூடியது.இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என அதன் ஆசிரியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

Intro:அண்ணாப்பல்கலை விவகாரம்
மாலையில் அமைச்சர்கள் கூட்டம்
Body:அண்ணாப்பல்கலை விவகாரம்
மாலையில் அமைச்சர்கள் கூட்டம்

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம்குறித்து
அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம், ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்பதா, வேண்டாமா என தமிழக அரசு முடிவு செய்யாத நிலையில், இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கேபி அன்பழகன், சிவி சண்முகம் ஜெயக்குமார் ஆகிய ஐந்து அமைச்சர்கள் மற்றும் உயர் கல்வித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.

தமிழக ஆளுநர் உரையில்,அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், மாநிலச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மாநில பொதுப் பல்கலைக்கழகமாக இருந்து வருவதன் காரணத்தால், ஒப்புயர்வு உயர்கல்வி நிறுவனம் என்ற தகுதி நிலையை அடைந்த பின்னரும்கூட, தொடர்ந்து மாநிலச் சட்டத்தின் கீழ் இயங்கும் என்றும், மாநில இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து அதற்குப் பொருந்தும் என்றும் இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக, மாண்புமிகு அமைச்சர்கள் ஐவரைக் கொண்ட ஒரு குழுவை, அரசு அமைத்துள்ளது.அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழு இன்று மதியம் கூடுகிறது.

அதில் விவாதித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இதனிடையே அண்ணாப்பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என அதன் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
Last Updated : Jan 6, 2020, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.