சென்னை: இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆராய்ச்சி, மாணவர்களுக்கான வசதிகள், ஆய்வகம் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வுச் செய்யப்பட்டு, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) சான்றிதழ் வழங்கி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய தர அங்கீகாரம் (NAAC) கடந்த 2019 செப்டம்பர் மாதம் காலாவதியானது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையானது (National Assessment and Accreditation Council, NAAC) இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பு ஆகும்.
இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு நிதியில் தன்னாட்சியுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் மதிப்பீடுகளை நடத்தும் ஒரு அரசு அமைப்பாக இருந்தாலும், அதன் தரவரிசையானது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆராய்ச்சி, மாணவர்களுக்கான வசதிகள், ஆய்வகம் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வுசெய்யப்பட்டு, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) சான்றிதழ் வழங்கி வருகிறது.
இதுவரை அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேசிய தர மதிப்பீட்டு ஆணையம் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வை செய்தனர்.
இந்த நிலையில் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகள் கடந்த 11 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பல்கலைக் கழகத்தில் உள்ள வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கான ஆய்வு வசதிகள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்திற்கு 4 மதிப்பெண்களுக்கு 3.54 மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் மூலம் நாக் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. 2002, 2007, 2014 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றிக்கும் தேசிய தர மதிப்பீட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: நடுவானில் பயணிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. அவசரமாக தரையிறங்கியும் பிரயோஜனம் இல்லை!