ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

author img

By

Published : Apr 29, 2021, 7:58 AM IST

கரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இணைய வழியாக வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கும், தொழில்நுட்ப கோளாரால் தேர்வில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கான மறுதேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறுதேர்வுகளுக்கான தேதி கரோனா பாதிப்பு குறைந்தபின் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 2001, 2002ஆம் ஆண்டுகளில் சேர்ந்து தற்போதுவரை தேர்ச்சிபெறாத பாடங்களில் சிறப்பு அரியர் தேர்வு எழுதவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.