ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு! - anna university exam postponed

சென்னை: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைப்பதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

university
university
author img

By

Published : Apr 9, 2020, 2:21 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்திற்கும் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் புதிய அட்டவணை வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தொழிற்சாலைகள் இயங்க வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்ற தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.