ETV Bharat / state

அண்ணா பல்கலை. தேர்வுகள் எப்போது நடைபெறும்? - exam new schedule will be released later

சென்னை: ஒத்திவைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna university
Anna university
author img

By

Published : Apr 17, 2020, 2:30 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்திற்கும் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அண்ணா பல்கலைகழக பருவத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என கடந்த 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்ட பின்னர் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள்: சேலத்தில் முதலமைச்சர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.