அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல், மே மாதங்கள் நடைபெறும் பருவத்தேர்விற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவில் இரண்டு மதிப்பெண் கொண்ட ஐந்து கேள்விகளும், மற்றொரு பகுதியில் எட்டு மதிப்பெண் கொண்ட ஐந்து கேள்விகளில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்ற வழிமுறையையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கேள்வித்தாள் மதிப்பீடும் முறையில் அமைக்கப்படும். கேள்விகள் புத்தகத்தைப் பார்த்து நேரடியாகப் பதில் அளிக்கும் வகையில் இல்லாமல், சிந்தித்து எழுதும் வகையில் அமையும்.
மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தோ, இணையதளத்திலிருந்து விடைகளைக் கண்டறிந்தோ தேர்வினை எழுதலாம். விடைத்தாள் அதிகபட்சமாக 12 பக்கங்கள் வரும் வகையில் தேர்வு எழுத வேண்டும். தேர்வினை எழுதிய பின்னர் விடைத்தாள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதனை அடுத்து 50 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண், அவர்களின் அக மதிப்பீடு மதிப்பெண் 100 மதிப்பெண்களுக்கு கணக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
கராேனா காரணமாக கடந்த பருவத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 50 மதிப்பெண்களுக்குத் தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சொந்த ஊர் புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்!