ETV Bharat / state

சூரப்பா மீீீதான அறிக்கைத் தயார்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சரிடம் நேரம் கேட்டுள்ளோம் என ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

சூரப்பா மீீீதான அறிக்கை தயார்
சூரப்பா மீீீதான அறிக்கை தயார்
author img

By

Published : Jun 29, 2021, 2:29 PM IST

சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணியில் இருந்த போது, பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

குறிப்பாக அவர் ரூ.248 கோடி ஊழல் செய்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்தக் குழுவானது அண்ணா பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள், புகார் அளித்தவர்களிடம் விரிவான விசாரணை நடத்தியது. அப்போது சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகின.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த நிலையில் மே 3ஆம் தேதி குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு விசாரணைக் குழு சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சூரப்பா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும் இதை முற்றிலும் மறுப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கரோனா ஊரடங்கைச் சுட்டிக்காட்டி கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என விசாரணை ஆணையம் கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் உயர் கல்வித்துறை கூடுதல் கால அவகாசம் வழங்கியது.

அறிக்கைத் தயார்

இதுகுறித்து விசாரணை அலுவலரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையைரசன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர் அதனை மறுத்துள்ளார்.

இதனையடுத்து விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இறுதி செய்துள்ளோம்.

விசாரணையின் போது சாட்சியங்களிடம் பெற்றத் தகவல்கள், கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களைத் தனியாக இணைப்புகளாகத் தயார் செய்துள்ளோம்.

விசாரணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. அறிக்கையை முதலமைச்சரிடம் அளிப்பதற்காக நேரம் கேட்டுள்ளோம்.

மேலும் விசாரணை அறிக்கையில் உள்ள தகவலின் அடிப்படையில் அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் அறிக்கையில் தெரிவித்து உள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான அறிக்கை தயார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.