ETV Bharat / state

B.E., B.Tech துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு; 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி முதலிடம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 1:59 PM IST

Updated : Sep 6, 2023, 2:10 PM IST

Anna University Counselling 2023: பொறியியல் படிப்பிற்கான துணைக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலிடம் பெற்ற மாணவி 199.5 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

TNEA supplementary rank list
பொறியியல் துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளீயீடு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர்தவதற்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி வேதலட்சுமி முதலிடத்ததையும், 199 மதிப்பெண்கள் பெற்று ராம் பிரசாத் 2ம் இடத்தையும், 198.5 மதிப்பெண்கள் பெற்று துருவன் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் சேர விண்ணப்பம் பெற்று, தரவரிசைப் பட்டியல் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2, 19,346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் 1,60,783 கலந்தாய்வின் மூலம் நிரப்பட உள்ளது.

சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொது பிரிவு கலந்தாய்விற்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 721 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மூன்று சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 59 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. அவற்றில் 3 சுற்றுக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 11 ஆயிரத்து 58 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில், 8475 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு துணைக் கலந்தாய்வின் மூலம் மாணவர்களை சேர்ப்பதற்கு, 12 ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பொது, தொழிற்கல்விப் பிரிவில் துணைத்தேர்வில் தகுதிப்பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் செய்யாத மாணவர்களும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 3 ந் தேதி வரையில் www.tneaonline.org என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பெற்றனர்.

துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல்: துணை கலந்தாய்வில் சேர்வதற்கு பொதுப்பிரிவிற்கு 13 ஆயிரத்து 650 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் கல்வியியல் பிரிவில் 13 ஆயிரத்து 375 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 275 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் தகுதி பெற்ற 13 ஆயிரத்து 244 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர்தவதற்கான தரவரிசைப் பட்டியலில் 200க்கு 199.5 மதிப்பெண் பெற்ற மாணவி வேதலட்சுமி முதலிடத்ததையும், 199 மதிப்பெண்கள் பெற்று ராம் பிரசாத் 2 ம் இடத்தையும், 198.5 மதிப்பெண்கள் பெற்று துருவன் 3 ம் இடத்தையும் பெற்றுள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் 176.5 மதிப்பெண் பெற்று முகமது தோபிக் முதலிடத்தையும், மணிகண்டன் 165.5 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், 165 மதிப்பெண் பெற்று முனிஸ்வரன் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு கல்வியியல் பிரிவில் 4 ஆயிரத்து 506 மாணவர்களும், தொழிற்கல்வி பயின்ற 79 மாணவர்கள் உட்பட 4585 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 466 மாணவர்கள் கலந்தாய்விற்கு தகுதி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பிரியதர்ஷ்ணி 188.5 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ராஜஸ்ரீ , இந்துமதி 187 மதிப்பெண் பெற்று 2 ம் இடத்தையும், கலைவாணி 185 மதிப்பெண் பெற்று 3 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதி விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். 8ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். 9ம் தேதி மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும். அதன் பின்னர் எஸ்சி அருந்ததியர் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்சி பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் செப்டம்பர் 10,11 ஆகியத் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு துணை பொறியியல் சேர்க்கை 2023 (TNEA 2023) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

காலியிடங்கள்: துணைக் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் கல்வியியல் பிரிவு மாணவர்களுக்கு 50,514 இடங்களும், தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2031 இடங்களும் என 52 ஆயிரத்து 545 இடங்கள் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வியியல் பிரிவில் 788 இடங்களும், தொழிற்கல்விப் பிரிவில் 88 இடங்களும் என 876 இடங்கள் உள்ளன என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "அருந்ததியினப் பெண் சமைத்தால் சாப்பிட மாட்டோம்".. வம்பு செய்த நபருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்.. கரூரில் நடந்தது என்ன?

Last Updated : Sep 6, 2023, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.