ETV Bharat / state

அரசு மீது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு!

author img

By

Published : Dec 3, 2019, 4:15 PM IST

சென்னை: பட்டமளிப்பு விழா மேடையில் தமிழ்நாடு அரசு மீது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா

அண்ணா பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 71 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் 22. 11 .2019க்கு முன்னர் பிஹெச்டி முடித்த ஆயிரத்து180 பேருக்கு, முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் இளங்கலை படிப்பில் தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற 71 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 665 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை வழங்கிய, ”அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் 400 பல்கலைக்கழங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மாநில பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தினை வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்தினை பெறுவதற்கான கடிதத்தினை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு இந்த கடிதம் கிடைத்தவுடன் அங்கீகாரம் கொடுப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

அப்பொழுது அருகிலிருந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான கடிதத்தை ஏன் வழங்கவில்லை? என கேட்டார். மேலும், உயர்கல்வித் துறை செயலரிடமும் இது குறித்து விளக்கம் கேட்டு அறிந்தார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குற்றச்சாட்டுக்கு மேடையிலேயே ஆளுநர், அமைச்சர், உயர்கல்வித் துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டது பரபரப்பாக அமைந்தது.

பட்டமளிப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன், சீர்மிகு அந்தஸ்து அளித்தால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெளிவான முடிவினை அறிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வரும் என்றால் ஒப்புதல் வழங்காது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீர்மிகு பல்கலை.அந்தஸ்து - அண்ணா பல்கலை. ஒப்புக்கொள்ளாவிடில் வேறு பல்கலைக்கழகத்துக்கு தரப்படும்'

Intro:அரசு மீது துணைவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

Body:அரசு மீது துணைவேந்தர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை,
பட்டமளிப்பு விழா மேடையில் தமிழக அரசு மீது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து வழங்குவதற்கு தமிழக அரசு கடிதம் அளிக்க வேண்டுமென பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் சூரப்பா தமிழக அரசு மீது குற்றச்சாட்டு பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் அண்ணா பல்கலைக்கழக இணைவேந்தர் மான கேபி அன்பழகனிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விசாரணை மேற்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்து தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 71 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழாவில் 22. 11 .2019க்கு முன்னர் பிஎச்டி முடித்த ஆயிரத்து 180 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் இளங்கலை படிப்பில் தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற 71 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல் இளங்கலை மற்றும் முதுகலை, ஆராய்ச்சி பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 665 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைகழகம் கடந்த ஓராண்டாக ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 400 பல்கலைக்கழங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மாநில பல்கலைக் கழகத்திற்கு மட்டுமே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சீர்மிகு பல்கலைகழக அந்தஸ்தினை வழங்கியுள்ளது. இந்த அந்தஸ்தினை பெறுவதற்கான கடிதத்தினை தமிழக அரசு அளிக்க வேண்டும். மத்திய அரசு இந்த கடிதம் கிடைத்தவுடன் அங்கீகாரம் அழிப்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

அப்பொழுது அருகிலிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகனிடம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்கான கடிதத்தை ஏன் வழங்கவில்லை?என கேட்டார். மேலும் உயர்கல்வித்துறை செயலாளரிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிந்தார்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன் குற்றச்சாட்டுக்கு மேடையிலேயே ஆளுநர் அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை செயலாளரிடம் விளக்கம் கேட்டது பரபரப்பாக அமைந்தது.

பட்டமளிப்பு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன், சீர்மிகு அந்தஸ்து அளித்தால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெளிவான முடிவினை அறிவிக்கவில்லை. தமிழக அரசு இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வரும் என்றால் ஒப்புதல் வழங்காது என தெரிவித்தார்.

Conclusion:visual live u
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.