ETV Bharat / state

தொடர் கதையாகிவரும் அண்ணா பல்கலை. வினாத்தாள் கசிவு விவகாரம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பருவத்தேர்வில் வேதியியல் பாட வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

anna university
author img

By

Published : Nov 7, 2019, 2:14 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட 500-க்கு மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அதன் வளாக கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. பருவத் தேர்வின் முதல் நாளான நேற்று (நவம்.6) தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வேதியியல் தேர்வுகள் தொடங்கின.

ஆனால், தேர்வு தொடங்கும் முன்னரே வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து புதிய வினாத்தாள் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

காலையில் நடைபெறவிருந்த தேர்வு பிற்பகலுக்கு மாற்றப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டும் நவம்பர் மாத நடைபெற்ற பருவத் தேர்வின்போது கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதையடுத்து கணிதத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த இரண்டு ஆண்டுகளில் வினாத்தாள் மறு மதிப்பீட்டு விவகாரம், தேர்வு வினாத்தாள்கள் லீக்கான விவகாரம் தொடர்பாக உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 37 தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம், தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் நீடிக்கின்றன.

ஆனால், தேர்வு கட்டுப்பாட்டுத் துறை தொடர்பாக பல புகார்கள் எழுந்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் அண்ணா பல்கலைக்கழகம் திணறிவருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Intro:Body:

தொடர்கதையாகி வரும் அண்ணா பல்கலை வினாத்தாள் கசிவு விவகாரம்

நேற்று நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக வேதியியல்  செமஸ்டர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 500க்கு மேற்பட்ட இணைப்பு கல்லூரிகள்,மற்றும் உறுப்பு கல்லூரிகள் ,அதன் வளாக கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நேற்று துவங்கியது முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வேதியியல் தேர்வுகள் தொடங்கியது.ஆனால் வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து புதிய வினாத்தாள் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டுள்ளது மேலும் காலையில் நடைபெற இருந்த தேர்வு பிற்பகலுக்கு மாற்றப்பட்டு தேர்வு நடத்தப்பட்டுள்ளது..

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டும்  நவம்பர் மாத நடைபெற்ற  செமஸ்டர் தேர்வின் போது கணிதபாடத்திற்கான  வினாத்தாள் முன்கூட்டியே  வெளியானதையடுத்து கணித தேர்வு ரத்து செய்யப்பட்டது..

கடந்த 2ஆண்டுகளில் வினாத்தாள் மறுமதிப்பீட்டு விவகாரம்,தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே  வெளியானது தொடர்பாக உறுப்பு கல்லூரிகளை சார்ந்த் 37 தற்காலிக  பணியாளர்கள் பணி நீக்கம்,அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டு துறை அதிகாரி பணியிடை நீக்கம்  உள்ளிட்ட  அண்ணா பல்கலைக்கழக  தேர்வுகட்டுபாட்டு துறை  தொடர்பாக புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன..

தேர்வு கட்டுபாட்டு துறை தொடர்பாக பல புகார்கள் எழுந்தாலும் அவற்றை கட்டுபடுத்த முடியாமல் அண்ணா பல்கலக்கழகம் திணறி வருகிறது..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.