ETV Bharat / state

4 வயது சிறுவன் உயிரிழப்பு; அண்ணா சதுக்கம் நீச்சல்குளம் திடீர் மூடல்! - நீரில் மூழ்கி சிறுவன் பிலி

மெரினா நீச்சல் குளத்தில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அண்ணா சதுக்கம் நீச்சல்குளம் மெயின்டனன்ஸ் பணிக்காக மூடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 4:16 PM IST

சென்னை: பள்ளிக்கரணை ராஜேஷ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகரன். இவரது 4 வயது மகன் அனிருத் கிருஷ்ணன். ஹரிகரன் தஞ்சாவூரில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வார விடுமுறைக்காக ஹரிகரன் சென்னையிலுள்ள வீட்டிற்குச் சென்றார்.

பிறகு தனது மகன், மனைவி மற்றும் உறவினர்கள் 6 பேருடன் விடுமுறையை கொண்டாட மெரினா கடற்கரைக்குச் சென்றார். மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்திற்கு மகன் அனிருத் கிருஷ்ணனை அழைத்துச் சென்றார். அங்கு குடும்பத்தினர் அனைவரும் குளித்துவிட்டு, நீச்சல் குளத்தில் இருந்து மேலே வந்தனர்.

அப்போது, 4 வயதுடைய அனிருத் கிருஷ்ணனை காணவில்லை. தேடி பார்த்தபோது நீச்சல் குளத்தில் மூச்சுத் திணறி கிடந்துள்ளார். உடனடியாக சிறுவனை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து அண்ணாசதுக்கம் காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அண்ணா சதுக்கம் நீச்சல்குளம் மெயின்டனன்ஸ் பணிக்காக மூடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்: இச்சமபம் குறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் நேற்று (ஆக. 26) மதியம் குடும்பத்தினருடன் சென்ற பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற 4 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வருத்தமடைந்தேன்.

  • சென்னை நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/OG7SuKNqg5

    — CMOTamilNadu (@CMOTamilnadu) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.