சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
சென்னையில் கோடம்பாக்கத்தில் அதிக நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது கோடம்பாக்கத்தைப் பின்னுக்குத் தள்ளி அண்ணாநகர் முதலிடத்தில் உள்ளது. கரோனா அதிகரித்துவந்தாலும் குணமடைந்தவரின் விழுக்காடு 90 ஆக உள்ளது.
இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 654 பேர் இந்தத் தீநுண்மி தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 528 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 264 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் இரண்டாயிரத்து 862 பேர் இந்தத் தீநுண்மியால் இறந்துள்ளனர்.
சென்னையில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான நிலைப் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அண்ணா நகர் - 16,068 பேர்
கோடம்பாக்கம் - 16,048 பேர்
ராயபுரம் - 13,919 பேர்
தேனாம்பேட்டை - 13,666 பேர்
தண்டையார்பேட்டை - 11,963 பேர்
திரு.வி.க. நகர் - 10,812 பேர்
அடையாறு - 10,882 பேர்
வளசரவாக்கம் - 8,985 பேர்
அம்பத்தூர் - 9,885 பேர்
திருவொற்றியூர் - 4,561 பேர்
மாதவரம் - 5,060 பேர்
ஆலந்தூர் - 5,326 பேர்
சோழிங்கநல்லூர் - 3,961 பேர்
பெருங்குடி - 4,725 பேர்
மணலி - 2,237 பேர்.