ETV Bharat / state

சூப்பர் ஸ்டார் புயல்.. அனிருத்தின் அமைதி நடவடிக்கை! - Ajithkumar

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருக்கையில், அனிருத் தனது ட்விட்டர் படத்தை மாற்றியது பேசுபொருளாக மாறியுள்ளது.

சூப்பர் ஸ்டார் புயல்.. அனிருத்தின் அமைதி நடவடிக்கை..

author img

By

Published : Dec 28, 2022, 12:42 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு என்ற இரு திரைப்படங்களும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. எனவே இதற்கான புரோமோஷன் வேலைகளில் இரண்டு படக்குழுவினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, விஜய்தான் முன்னணியில் இருக்கிறார் என்பதுபோல ஒரு தனியார் ஊடகத்தில் பேட்டி அளித்திருந்தார். அதேபோல் டிச.24 அன்று நடைபெற்ற வாரிசு இசை வெளியீட்டு விழாவிலும், ‘நம்பர் ஒன், நம்பர் ஒன், நம்பர் ஒன்’ என விஜய்க்கு புகழாரம் சூட்டினார், தில் ராஜூ.

இது வழக்கம்போல விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் விவாத மேடையாக மாறியது. அதேநேரம் மீண்டும், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வியும் சினிமா மேடையில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டர் பேக்ரவுண்ட் படத்தை (Twitter Background Image) மாற்றியுள்ளார்.

அதில், ரஜினிகாந்தின் புகழ் பெற்ற டைட்டில் கார்டான ‘SUPER STAR ரஜினி’ படம் இடம் பெற்றுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தில், ‘ஜிமிக்கி பொன்னு’ என்ற பாடலை பாடிய அனிருத்தின் இந்த பதிவு, தற்போது புதிய விவாதத்தைத் தொடக்கி வைத்துள்ளது.

இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் ஓர் பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.