சென்னையில் பழைய கால ஆங்கிலோ - இந்தியன் உணவு வகைகளை தயாரித்து ''மினிஸ்ட்ரி ஆஃப் சட்னி'' என்ற பெயரில் உணவு திருவிழா இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை சென்னை பரங்கிமலையில் உள்ள ராடிசன் ப்ளூ உணவு விடுதியில் உள்ள சிறப்பு உணவகமான 'சால்ட் கோ 531' என்ற உணவகத்தில் நடைபெறுகிறது.
'சால்ட் கோ 531' என்பது சென்னை ரேடிசன் ப்ளு ஹோட்டலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு உணவகம். இதில் இமயமலையில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளின் படிவங்களில் இருந்து பெறப்பட்ட 'பிங் இமாலய உப்பு' கொண்டு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த உணவு திருவிழாவில் ஆங்கிலோ - இந்தியனின் 32 வகையான உணவுகள் சமைக்கப்படுகின்றன.
'மினிஸ்ட்ரி ஆஃப் சட்னி' என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழா ஆங்கிலோ - இந்தியர்களின் உணவு வகைகளை காட்சிப்படுத்தும் விதமாக இருக்கும். மேலும் இன்றைய தலைமுறையினர் அவற்றை ருசித்து மகிழ ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
டிசம்பர் 15ஆம் தேதிவரை நடக்கும் இந்த உணவு திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும் இந்த உணவு திருவிழாவில் ஆங்கிலோ -இந்தியர்கள் சாப்பிட்டு மகிழ்ந்த முள்ளிகதாவ்னி கிராண்ட், மாஸ்டர் கேப்டன், ஆங்கிலோ இந்தியன் போர்ன் கிளாசிக் புட்டிங் உள்ளிட்ட சைவ, அசைவ உணவு வகைகள் பரிமாறப்பட இருக்கின்றன.
இதையும் படிக்க: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவை கவுரவித்த அரசு