ETV Bharat / state

இயக்குனர் பாரதிராஜா தலைமையில் மே 7 ஆம் தேதி அமைச்சர் ரோஜாவுக்கு பாராட்டு விழா - ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து நான் அறிவேன்- கணவர் ஆர்.கே. செல்வமணி உருக்கம்

வெற்றி என்பது கடினமானது, கணவனாக இருந்ததால் ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து அறிவேன். நடிகை ஆகிவிடலாம் எளிது. ஆனால் அரசியல்வாதி என்பது சாதாரணமானது அல்ல. ரோஜா தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட விரும்பினார், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என பெப்சி அமைப்பின் தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து நான் அறிவேன்- கணவர் ஆர்.கே. செல்வமணி உருக்கம்  andhra-tourism-minister-roja-selvamani-to-be-felicitated-on-may-7th-at-kalaivanar-arangamரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா
ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா... OR ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து நான் அறிவேன்- கணவர் ஆர்.கே. செல்வமணி உருக்கம் ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து நான் அறிவேன்- கணவர் ஆர்.கே. செல்வமணி உருக்கம் andhra-tourism-minister-roja-selvamani-to-be-felicitated-on-may-7th-at-kalaivanar-arangam ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா
author img

By

Published : Apr 28, 2022, 11:22 AM IST

சென்னை: ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஏப்ரல்.27) அண்ணாசாலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, "என்னிடம் முதன் முறை அறிமுகம் செய்யப்பட்ட போது எனக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்தார், அதனால் ரோஜா என அவருக்கு பெயர் வைத்தேன். தைரியத்தின் உச்சம் ரோஜா. தமிழ்நாட்டு மருமகள் ரோஜா. பல்வேறு நுணுக்கம் தெரிந்தவர் என்பதால் ஆர்.கே செல்வமணி அரசியலுக்கு வந்தால் பெரிய ஆள் ஆவார்.

பாரதிராஜா தலைமையில் ரோஜாவுக்கு பாராட்டு விழா

நான் உளறுவாயன் என்பதால் அரசியலுக்கு போகவில்லை. எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்பட பலரும் என்னை அரசியலுக்கு வரச் சொன்னார்கள். செத்தாலும் திரைக் கலைஞனாகச் சாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என ஜெயலலிதாவிடம் கூறிவிட்டேன்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் ( மும்பையில்) இருந்து திரைக் கலைஞர்களை வரவழைக்க உள்ளோம். கலைத் தன்மை கொண்ட அரசியல் தலைவர்களையும் அழைப்போம். திரைச்சங்க நிதி் இதற்குச் செலவு செய்யப்படாது , தனியாகக் குழு அமைத்து செல்வமணி செலவில் இது நடைபெறுகிறது" என தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பு

அதனை தொடர்ந்து பேசிய ஆர்.கே.செல்வமணி, "மேடையில் பேச கூச்சப்பட்ட என்னை, பேச்சாளராக்கியது பாரதிராஜாதான். என் மனைவிக்கு விழா நடத்தினால் நான் பதவியைத் தவறாகப் பயன்படுத்துவது போல இருக்கும் என ஆர்.வி. உதயகுமாரிடம் கூறினேன். தயக்கத்திற்குப் பிறகு ஒரு வாரம் காத்திருந்து பாரதிராஜாவிடம் கேட்டேன், உடனே ஏற்றுக் கொண்டார் பாரதிராஜா.

வெற்றி என்பது பெண்ணியத்திற்கு கடினமானது, கணவனாக இருந்ததால் ரோஜாவின் வலி, போராட்டம் குறித்து அறிவேன். நடிகையாகிவிடுவது எளிது, அரசியல்வாதியாவது சாதாரணமல்ல. ரோஜா தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட விரும்பினார், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரோஜா ஒரு விபத்தாக அரசியலுக்குச் சென்றார். ரோஜாவால் கொஞ்ச நாள்தான் அரசியலில் இருக்க முடியும் என்று நினைத்தேன்.

ரோஜாவுக்கு தமிழ்த் திரையுலகினர் சார்பாக மே 7 ஆம் தேதி பாரதிராஜா தலைமையில் பாராட்டு விழா

வெளிநாட்டுப் பயணம் ஒன்றில் ரோஜாவின் அரசியல் பேச்சை கேட்டு வியந்துபோனேன். மதுவிலக்கு போராட்டத்தில் கடையின் ஷட்டரை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டது அவரை அரசியல்வாதியாக மாற்றியது. இரண்டு முறை தோற்றுப் போன போதும் அரசியலில் தோல்வியுடன் ரிட்டையர் ஆக மாட்டேன் என்று கூறினார்.

ரோஜாவின் திரைப்பிரபலம் காரணமாகச் சொந்த கட்சியிலும், எதிர் கட்சியிலும் விரோதிகள் உருவாகினர். எனவே இரு முறை தோற்றார் ரோஜா, அரசியல் ஒரு சிண்டிகேட் என்று கூறினேன். அதையும் மீறி 2014 ல் முதல் முறை ரோஜா வெற்றி பெற்றார். ஒரு பெண் கலைத்துறையில் பயணம் தொடங்கி, அரசியலில் வென்றதன் விழாவாக இது நடைபெறுகிறது. 30 ஆண்டு முன்பு சாதாரண விதையாக இருந்தவர், கடின உழைப்பால் இந்தளவு உயர்ந்துள்ளார்" என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இசையமைப்பாளர் தினா, நடிகர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'ஆந்திரா எனக்கு தாய்வீடு; தமிழ்நாடு எனக்கு மாமியார் வீடு' - நடிகை ரோஜா உருக்கம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.