ETV Bharat / state

தமிழ் தொழிலாளர்களுக்கு உணவு அளித்த ஆந்திர டிஜிபி - குவியும் பாராட்டு! - தமிழ் தொழிலாளர்களுக்கு உணவு அளித்த ஆந்திர டிஜிபி - குவியும் பாராட்டுகள்

சென்னை: ஆந்திராவில் தமிழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கிய அம்மாநில டிஜிபிக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

andhra dgp appauled for donating free foods to tamil migrant workers
தமிழ் தொழிலாளர்களுக்கு உணவு அளித்த ஆந்திர டிஜிபி குவியும் பாராட்டு
author img

By

Published : May 25, 2020, 3:18 AM IST

ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் அவர்களின் வேண்டுகோளின் படி ஷ்ராமிக் சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்து, அதன் மூலம் சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்களை மத்திய - மாநில அரசுகள் அனுப்பி வைத்து வருகின்றது.

இந்த நிலையில் இதேபோல் மும்பையில் சிக்கித் தவித்த ஆயிரத்து 500 தமிழர்களை நேற்று முன் தினம் (மே 23) இரவு ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்து ரயிலானது புறப்பட்டுள்ளது. பின்னர் பயணிக்கும் பொதுமக்களுக்கு காலை வரை அரசு ஏற்பாடு செய்த உணவை வழங்கி வந்தனர். ஆனால், நண்பகல் நேரத்திற்கு பயணிக்கும் தொழிலாளர்களுக்கு சுத்தமாக உணவில்லை என தெரியவந்ததையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களிடம் தொடர்பு கொண்ட போதும் உணவு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

andhra dgp appauled for donating free foods to tamil migrant workers
உணவுப் பொட்டலங்கள்
இத்தகவல் சென்னையில் இயங்கி வரும் பூமிகா அறக்கட்டளைக்குத் தகவல் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பூமிகா அறக்கட்டளை நிறுவனம், வேறு வழியில்லாமல் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் தகவலை தெரிவித்தது. பின்னர் உடனடியாக அந்த ரயிலானது பயணித்துவரும் இடத்தை அறிந்து, ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்யா மற்றும் உதவி ஆணையர் பாபுவிற்கு செல்போன் மூலம் தகவலை சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரத்து 500 தமிழர்களுக்கு உணவு வழங்கப்படும் செலவின் தொகையினை அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

உணவுகளை ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்த காவலர்கள்
உடனே ஆனந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆந்திர காவல்துறை தலைமை இயக்குநர் தாமோதர் கவுதம் சவாங்கிடம் இத்தகவல் கடத்தப்பட்டது.
பின், ஆயிரத்து 500 தமிழ் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி, உதவி செய்வது, எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எனவும், மேலும் குறிப்பாக சொந்த செலவிலேயே உணவு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் சென்னை காவல் ஆணையருக்கு ஆந்திர காவல்துறை தலைமை இயக்குநர் கூறியுள்ளார்.
டபராவில் வந்த பிரியாணி
பிரியாணி

அதையடுத்து அந்த ஆயிரத்து 500 தமிழ்ப் பயணிகளுக்கு பிரியாணி, கலவை சாதங்கள், பிஸ்கெட், ஆயிரத்து 500 குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும் உணவில்லாமல் தவித்தபோது உதவிய சென்னை காவல் ஆணையர், ஆனந்த்பூர் - குண்டக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆந்திர மாநில காவல் துறை தலைமை இயக்குநர், பூமிகா அறக்கட்டளைக்குத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

உணவுப் பட்டியல்

இதையும் படிங்க: ஊரடங்கால் முடங்கிய தொழிலாளர்கள்: உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றத்தினர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.