ETV Bharat / state

‘பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது’ - அன்புமணி ராமதாஸ் - பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடு

சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Nov 7, 2022, 5:46 PM IST

Updated : Nov 7, 2022, 5:59 PM IST

சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்.

  • மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இது இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சமூக நீதி கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடும்!(1/4)#SocialInjustice

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியா சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு. அவற்றைக் களைய வேண்டுமானால் சமூக நிலையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நிலைக்கு பதிலாக பொருளாதார நிலையை சமூகநீதிக்கான அளவீடாகக் கொள்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

மனிதர்களின் பொருளாதார நிலை என்பது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடக் கூடியது ஆகும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வறுமை ஒழிப்பு நடவடிக்கையாகத் தான் இருக்குமே, சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சமூகநீதியாக இருக்காது.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த பட்டியலின, பழங்குடியின, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படும் நிலையில், அதை போக்குவதற்காக நடவடிக்கைகள் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அவற்றை பா.ம.க. ஆதரிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம்

Last Updated : Nov 7, 2022, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.