சென்னை: அம்பத்தூர் அருகில் உள்ள பட்டறைவாக்கம் சர்வீஸ் சாலையில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் விடுமுறை நாளான இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நிறுவனத்திற்குள் சென்று நிறுவனத்தின் மேற்கூறையில் ஏறியுள்ளார்.
25 அடி உயரம் கொண்ட அந்த கூரையிலிருந்து கீழே குறித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அந்த நபர் மேற்கூரையின் இருபுறமும் மாறி மாறி சென்று தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
இந்த நிலையில் தீயணைப்பு துறையினர் அந்த நபரை கீழே இறங்கி வருமாறு கூறிகொண்டிருந்த நிலையில் அவர் மேற்கூரையிலிருந்து கிழே குதித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். உடனடியாக காவல்துறையினர் 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:இரண்டு நீட் தேர்வு மையங்களுக்கு ஒரே பெயர் - குழம்பிய தஞ்சை மாணவர்கள்!