ETV Bharat / state

போதையில் பெண் பலாத்காரம் - முதியவருக்கு 10 ஆண்டு சிறை..

குடிபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதையில் பெண் பலாத்காரம்
போதையில் பெண் பலாத்காரம்
author img

By

Published : Oct 20, 2022, 9:57 PM IST

சென்னை: அண்ணா நகர் பகுதியில் திருமணமாகி வசித்துவந்த 30 வயதான பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த, அமைந்தகரையைச் சேர்ந்த 60 வயது முதியவரான முருகானந்தம், அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரில் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், முருகானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன்பு விசாரணை நடைபெற்றபோது அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.

இந்த வழக்கில் அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், அத்துமீறி நுழைந்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; மறு ஆய்வு கோரிய மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.