ETV Bharat / state

விரைவில் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்!

author img

By

Published : Sep 1, 2021, 8:17 PM IST

உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

an-integrated-court-in-nagapattinam-will-be-set-up-soon

சென்னை : சட்டப்பேரவையில் இன்று (செப்.1) நடைபெற்ற விவாதத்தில் கும்பகோணம் பகுதியில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும், மகளிர் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ”தமிழ்நாட்டில் 14 சட்டக்கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சீர்மிகு பள்ளியும் என 16 சட்டக் கல்லூரி உள்ளது. இதில் 17 ஆயிரத்து 433 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாவட்டந்தோறும் சட்டக் கல்லூரி அமைப்பது தான் முதலமைச்சரின் விருப்பம்.

மகளிர் நீதிமன்றம்

ஆனால் கடந்த ஆட்சியின் அசாதாரணத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக எந்த விதமான புதிய கல்லூரியும் தொடங்கப்பட முடியாத சூழல் உள்ளது. நீதிமன்றம் அமைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலின் அடிப்படையிலேயே மாநில அரசு அதற்கான நிதியை ஒதுக்கி நீதிமன்றம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கும்.

நீதிமன்றத்துக்குக் கோரிக்கை அனுப்பி உயர் நீதிமன்றம் பரிசீலிக்கப்படுவதற்கான கடிதம் அளிக்கும் பட்சத்தில் மகளிர் நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகம் திறக்க கோரிக்கை

விசிக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர்,” நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்கட்டமைப்பு பணிகளுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்கட்டமைப்பு பணிகள் முடிந்தவுடன் நாகப்பட்டினத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.

சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் சங்கராபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட நீதிமன்றத்தைத் திறந்து வைக்கக்கோரி கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த அவர், “ யாருடைய கோரிக்கையாக இருந்தாலும் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதில் முனைப்புடன் செயல்படும் அரசு திமுக அரசு. சங்கராபுரத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தில் வேளாண் துறைக்குச் சொந்தமான பாதை ஒன்று உள்ளது. அப்பாதை வேளாண் துறையின் அனுமதியோடு கையகப்படுத்தப்பட்டு நீதிமன்றம் திறக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : புளியந்தோப்பு விவகாரம் - அறிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.