சென்னை: சென்னை ஐஐடியில் எரிசக்தி ஆற்றல் கூட்டமைப்பின் மாநாடு 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் கார்பன் அளவை குறைக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் 400க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
இந்த கருத்தரங்கு குறித்து சென்னை ஐஐடியின் பேராசிரியர் ரகுநாதன் கூறும்போது, ’இந்தியாவில் கார்பன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக பஞ்சாமிர்தம் என்ற பருவநிலை தொடர்பான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
அதனை அடைவதற்கு பல்கலைக்கழகங்கள், தொழில்துறை, அரசு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுவதால், இந்த எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா - இந்தியா எரிசக்தி மையம் துவக்கப்பட்டு, இதன் மூலம் தொழில் மற்றும் அறிவு சார்ந்த பரிமாற்றங்கள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும்.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் கார்பனை குறைப்பதற்கான ஆய்வுகள் குறித்த பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டு, அரசிற்கும் அளிக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மாண்டஸ்' புயல் முன்னெச்சரிக்கை; இன்று இரவு எங்கெங்கு பஸ் இயங்காது தெரியுமா?