ETV Bharat / state

கிராமப்புற திருக்கோயில்களின் திருப்பணிகளுக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் சேகர்பாபு அதிரடி! - restoration of rural temples

தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புற திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற திருக்கோயில்களின் திருப்பணிகளுக்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : May 13, 2022, 3:42 PM IST

சென்னை கடந்த சட்டப்பேரவை நிதியாண்டு 2021-2022 அறிவிப்பில் கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின்கீழ், கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சமாக தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்காக தற்போது ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி, 1250 திருக்கோயில்கள் இறுதி செய்யப்பட்டு திருக்கோயில் பெயர் விவரப்பட்டியல் இந்து சமய அறநிலையத்துறை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 1250 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று, பொதுநல நிதியின் மூலம் மண்டல இணை ஆணையர் நிலையில், திருக்கோயில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும், விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்தவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையின் மிக நீளமான பாலம்-திறந்து வைத்தார் முதல்வர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.