சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று நாம் கடைபிடித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. சர்தார் வல்லபாய் பட்டேலுக்குப் பிறகு அதிக புத்தகங்களைப் படித்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி சொல்வதற்கு காலமும் நேரமும் பத்தாது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஜெயலலிதாவின் பெயரில் அமமுக என்ற கம்பெனியை டிடிவி தினகரன் நடத்தி வருகிறார். கொடியில் ஜெயலலிதாவின் படம் போட்டு அக்கம்பெனியை நடத்துகிறார். இன்று ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி, அவரின் நினைவிடத்திற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்து சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் தினகரனோ வாகனத்தில் சென்று கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றார்.
அவரால் நடந்து சென்று கூட அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவர் என்ன வானத்திலிருந்து குதித்து விட்டாரா? குறைந்து போய்விடுவாரா?” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: "தான் அதிமுகவில் இணைய முதலமைச்சரும் துணைமுதலமைச்சரும் தான் முட்டுக்கட்டை" - ஜெ. தீபா குற்றச்சாட்டு