அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ஓணம் வாழ்த்து செய்தியில், “பொன் ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேரள மக்களின் அறுவடைத் திருநாளான திருவோணம், அம்மக்களின் பாராம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் திருவிழாவாகும்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மொழியால் இணைந்த மக்கள் அனைவரும் கொண்டாடும் இத்திருநாளின் மூலம் சகோதரத்துவமும், ஒற்றுமையும் தழைத்தோங்கட்டும்.
‘மன்னாதி மன்னனாக இருந்தாலும், கடைகோடி குடிமகனாக இருந்தாலும் ஆணவத்தால் எதையுமே சாதிக்க முடியாது; அன்பும் பணிவும் மட்டுமே அனைவரின் இதயங்களிலும் இடம்பிடிக்கும்’ என்பதை மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக
உலகுக்குச் சொல்லும் ஓணம், ஒவ்வொருவரின் வாழ்விலும் புதிய வெளிச்சங்களைக் கொண்டு வரட்டும்.
கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்து மனித குலம் விரைந்து மீண்டெழுந்திடவும், நலமும் வளமும் பெருகிடவும் இந்த நன்னாளில் வழி பிறக்கட்டும். பொன் ஓணத்தில் இருந்து புது விடியல் தொடங்கட்டும் என்று உலகெங்கும் வாழ்கிற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக் கூறியுள்ளார்.