சென்னையை அடுத்த திருவொற்றியூரில் மிகவும் பழமைவாய்ந்த வடிவுடையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. பிரம்மோற்சவ விழாவின் 9ஆவது நாளான இன்று கல்யாணசுந்தரர் - சங்கிலிநாச்சியார் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைக் காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் தாலி ஆகியவைப் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும், 10ஆம் தேதி இரவு திரு நடனம், தியாகராஜர் பந்தம், பறி உற்சவம் ஆகிய விழாக்களுடன்ன் திருக்கல்யாணம் நிறைவுபெறுகிறது.
இதையும் படிங்க: அம்பத்தூரில் நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டி