ETV Bharat / state

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குட் பை சொல்லும் 'அம்மா குடிநீர்’

சென்னை: தமிழ்நாடு அரசால் பிளாஸ்டிக் பாட்டில்களில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர் இனி கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

water
author img

By

Published : Nov 8, 2019, 10:58 PM IST

தமிழ்நாட்டில் அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு விற்பனையாகின்றன.

தமிழ்நாடு போக்குவரத்துதுறை சார்பில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர்வ பாட்டில்கள் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கிடைக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் இந்த தண்ணீரை மக்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் பேருந்து நிலையங்களில் பார்க்கும் இடங்கள் எல்லாம் பிளாஸ்டிக்காக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தித்துள்ளது. அதை முன்னெடுக்கும் வகையில், அம்மா குடிநீரை பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் மூலம் விற்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

750மிலி என்ற அளவில் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டில்களை 5 ரூபாய் அல்லது 7 ரூபாய்க்கு விற்க அரசு ஆலோசித்து வருகிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள அம்மா குடிநீர் தயாரிப்பு வளாகத்தில் இந்த பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான கருவிகள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு டெண்டர்விட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்து நாளொன்றுக்கு 2 லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்படும். ஐந்தாண்டிற்குள் இந்த கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'சாலையில் வீணாகச் செல்லும் தண்ணீரை சேமிக்க வேண்டும்!'

Intro:Body:பிளாஸ்டிக் மாற்றாக கண்ணாடி பாட்டிலில் வர உள்ள 'அம்மா குடிநீர்'

தமிழகத்தில் அம்மா குடிநீர் பாட்டில்கள் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10 என்ற விலையில் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு விற்பனையாகின்றன. தமிழக போக்குவரத்து சார்பில் நிர்வகிக்கப்படும் அம்மா குடிநீரை விற்க பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீரை அரை குறையாக குடித்து விட்டு பாட்டிலை அப்படியே வீசி விடுகின்றனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. எனவே அம்மா குடிநீரை பிளாஸ்டிக் கேன்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் மூலம் விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 750 மிலி என்ற அளவில் தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டில்களை 5 ரூபாய் அல்லது 7 ரூபாய்க்கு விற்க அரசு ஆலோசித்து வருகிறது. கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தில் செயல்படும் அம்மா குடிநீர் தயாரிப்பு வளாகத்தில் இந்த பாட்டில்கள் தயாரிக்கும் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான கருவிகள் வாங்குவதற்காக தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து நாளொன்றுக்கு 2 லட்சம் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு இந்த கண்ணாடி பாட்டில்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.