ETV Bharat / state

அபிநந்தன் மண்ணில் நின்று பேசுவது பெருமையாகவுள்ளது-அமித்ஷா - அமித்ஷா

கோவை: எதிரி நாட்டு விமானத்தை தாக்கிய அபிநந்தன் மண்ணில் இருந்து பேசுவதற்கு பெருமை கொள்கிறேன் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா
author img

By

Published : Apr 2, 2019, 11:08 PM IST

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதகிருஷ்ணனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பரப்புரைக் கூட்டத்தில் பேசியதாவது, "எதிரி நாட்டு விமானத்தை தாக்கிய அபிநந்தன் மண்ணில் இருந்து பேசுவதற்கு பெருமை கொள்கிறேன். கொங்கு மண்ணில் பேசுவது பெருமையாக உள்ளது.

அபிநந்தன் மண்ணில் நின்று பேசுவது பெருமையாகவுள்ளது-அமித்ஷா

கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அப்படி இருந்தும் கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று வந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இருவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தவர் பிரதமர் மோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தமிழ்நாட்டில் பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. பொள்ளாச்சியில் தென்னை ஆராய்ச்சி நிலையம், கோவை முதல் சேலம் வரையிலான விமான சேவை, கோவையில் ஆடை உற்பத்திக்காக 1.30 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். ஆனால் திமுக-காங்கிரஸ் ஆட்சியில் ஒரு திட்டங்கள் கூட செய்யவில்லை. மீண்டும் கோவை தொகுதிக்கு சிறப்பான திட்டங்கள் செய்ய பாஜக வெற்றிப்பெற வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தூத்துக்குடியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அமித்ஷா பேசும்போது,

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்தி இந்த கூட்டத்தை ஆரம்பிக்கிறேன். சென்ற தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட போது பெரிதாக கூட்டணி இல்லை. ஆனால் தமிழ்நாட்டிற்கு 2 மத்திய அமைச்சர்களை தந்துள்ளோம். இந்தியாவின் தென்பகுதியை பாஜக கவனிக்காமல் இருந்தது கிடையாது. சமீபத்தில் வந்த கருத்து கணிப்புப்படி 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம். மீண்டும் மோடி அரசு கட்டாயம் அமையும். அப்படி அமையும் போது ஏற்கனவே தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டதை விட அதிகமாக பாடுபடுவோம் என உறுதி அளிக்கிறோம். இன்று  திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி,  ராசா, கார்த்தி சிதம்பரம் என அனைவரும் ஊழல் வாதிகள்.
அவர்கள் 12 லட்சம் கோடி அளவுக்கு கொள்ளை அடித்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை நடைபெறுகிற
இடைத்தேர்தல் மட்டும் அல்ல, வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

புல்வாமா தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இறந்துள்ளனர். இதற்கு பதிலடியாக மத்திய அரசு, தீவிரவாதிகள் நம் வீரர்களை எப்படி நம்மை குண்டு வைத்து தாக்கினரோ அப்படியே அவர்களை தாக்கி அளித்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என் தகவல் வருகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்படும் என கூறி இருக்கிறார்கள். அடுத்த பிரதமர் காஷீரில் இருந்து வருவார் என கூறியுள்ளனர்.

அப்படி எனில் அவர்கள் காஷ்மீரை விட்டுக்கொடுக்க முடிவு செய்து விட்டார்களா?. ஆனால் பாஜக ஒருபோதும் காஷ்மீரை விட்டுக்கொடுக்காது.
ஏனெனில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம்.

மத்திய பாஜக தலைமையிலான அரசு 14வது நிதி குழுவின் அடிப்படையில் 5 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளது. ஆனால் பதிமூன்றாவது நிதிக் குழுவின் அறிக்கையின்படி காங்கிரஸ் தலைமையிலான அரசு ஒதுக்கிய தொகை வெறும் 91,000 கோடியே.

இதைப்போல் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேலும் அதிக தொகை வழங்குவோம். 5 லட்சம் வருமானம் வருவோர்க்கு வருமான வரி விலக்கு அளித்துள்ளோம். மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைத்துள்ளது. மதுரையில் 12 ஆயிரம் கோடியில் மருத்துவ மனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1000 கோடி ரூபாயை இரயில்வே மேப்பாட்டுக்கு வழங்கியுள்ளது.

குமரி மாவட்டத்தில் 20 ஆயிரம் கோடியில் இனயம் துறைமுகத்துக்கு வழங்கி உள்ளது மத்திய அரசு. இதுபோன்ற பல்வேறு வளர்ச்சிக்காக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றிப்பெற்றால் தமிழகத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சி கொடுப்போம். 40 தொகுதிகளிலும் மிக பெரிய வெற்றியை கொடுங்கள் எனக்கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.