ETV Bharat / state

'புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக நிச்சயம் உருவாக்குவோம்..' - நம்பிக்கையாக பேசிய அமித்ஷா!

author img

By

Published : Apr 24, 2022, 6:26 PM IST

அடுத்தமுறை இங்கு வரும்போது இதை பெஸ்ட் புதுச்சேரியாய் மாற்றிவிட்டுத் தான் வருவோம் என புதுச்சேரியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

’புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக நிச்சயம் உருவாக்குவோம்..!’ : புதுச்சேரியில் அமித்ஷா பேச்சு

புதுச்சேரி: குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி, கிழக்குக் கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுவது உட்பட பல திட்டங்களின் தொடக்கவிழா மற்றும் அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் இன்று(ஏப்.24) மாலை நடந்தது.

பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம்: இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான ரூ.204 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “புண்ணிய பூமியான புதுச்சேரியை வணங்குகிறேன். பாரதி, அரவிந்தரின் கர்ம பூமியாக புதுச்சேரி திகழ்கிறது.
விவிஎஸ் ஐயர், பாரதிதாசன் ஆகியோரை சேவையாற்ற அனுப்பியது. மக்களின் தீர்ப்பால் தான் என்.ஆர்.காங் - பாஜக அரசு செழிப்பாக இருக்கிறது. புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றி விட்டுத்தான் அடுத்த முறை மக்களைச் சந்திக்க வருவோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் , புதுச்சேரியில் சூரிய சக்தி மூலம் 26 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் ரங்கசாமி, நமச்சிவாயம் தலைமையில் பிரதமர் மோடி சொன்னது போல பெஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாகவுள்ளோம். ரூ.6 கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியைப் புதுமையான யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்’ என்றும் தெரிவித்துக்கொண்டார்.

புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கை: விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதிதாக காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 390 காவலர்களுக்கு பணி ஆணை வழங்கினார்கள்.

முன்னதாக பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியின் நீண்ட நாள் கோரிக்கை, மாநில அந்தஸ்து. இதை மத்திய அரசு வழங்கும் என நம்பிக்கையுள்ளது. பிரதமர் கூறிய ’Best puducherry’-யைக் கொண்டு வருவோம். புதுச்சேரிக்கு கூடுதல் நிதி வழங்க அமித்ஷா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என முதலமைச்சர் ரங்சாமி பேசினார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், “புதுச்சேரி எல்லா விதத்திலும் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி மாதிரி மாநிலமாக உயரும். அமித் ஷா வருகையால் புதுச்சேரியின் வளர்ச்சி வேகம் எடுக்கும். எதிர்ப்பவர்கள் புதுச்சேரி வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்று ஆளுநர் தமிழிசை பேசினார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமாெழிக் கொள்கை தான்..!' - பள்ளிக்கல்வித்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.