ETV Bharat / state

மிக்ஜாம் புயல்; மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கத் தயார் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி! - தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமித் ஷா அழைப்பு

Cyclone Michaung: சென்னையில் மிக்ஜாம் புயல் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உள்துறை அமைச்சர் அமித் ஷா செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

Cyclone Michaung
மிக்ஜாம் புயல் பாதிப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 7:09 AM IST

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம் புயல்' காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் மொத்தமும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கடந்த 48 வருடங்களில் இல்லாத கனமழை சென்னையில் பெய்து வருவதாகவும், இது போன்ற ஒரு கனமழையை சென்னை மக்கள் சந்திப்பது இதுவே முதல் முறை என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அனைத்து பகுதிகளிலுமே தண்ணீர் வெள்ளக்காடாக தேங்கியுள்ளது. மழை நீர் தேங்காத பகுதி என எதுவுமே இல்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த புயல் பாதிப்பால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அவசரத் தேவையாக இருந்தாலும், உடனடியாக சென்னை மாநகராட்சியை அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயாலானது இன்று (டிச.5) முற்பகலில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.4) உத்தரவிட்டார். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் எனவும், இயற்கையின் கோரத் தாண்டவத்தை மனிதத்தின் துணை கொண்டு வெல்வோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

  • தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர் திரு.என். ரங்கசாமி அவர்கள், ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். மக்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து…

    — Amit Shah (@AmitShah) December 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அது தொடர்பாக அமைச்சர் அமித் ஷா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட சவாலான வானிலையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன்.

மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் உறுதியளித்தேன். ஏற்கனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் போதுமான அளவுக்கு அங்கே உள்ளது மற்றும் கூடுதல் படைகள் மேலும் உதவிக்கு தயாராக உள்ளன" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை, ஆவடியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு - தமிழக அரசு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.