ETV Bharat / state

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்குத் தமிழ்நாட்டில் முதுகெலும்பு வளைவு சிகிச்சை!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு முதுகெலும்பு வளைவை சரி செய்வதற்கான உலோக இணைப்பற்ற அறுவை சிகிச்சையை அப்பலோ மருத்துவமனை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டில் முதுகெலும்பு வளைவு சிகிச்சை

author img

By

Published : Apr 27, 2021, 6:02 PM IST

சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் ப்ரை, கடந்த 30 வருடங்களாக இந்த முதுகெலும்பு வளைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த 2 வருடங்களாக அவர் கடுமையாக அவதிப்பட்டுவந்துள்ளார்.

இடியோபதிக் ஸ்கோலியோசிஸ் காரணமாக, அவரால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்த அசாதாரண பாதிப்பான ஸ்கோலியோசிஸ் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 60 லட்சம் முதல் 90 லட்சம் வரையிலான மக்களை பாதிக்கிறது. இடியோபதிக் ஸ்கோலியோசிஸ் விலா எலும்புப் பகுதி, தண்டு மற்றும் தோள்களில் சிதைவை ஏற்படுத்தும்.

அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டில் முதுகெலும்பு வளைவு சிகிச்சை
அமெரிக்காவை சேர்ந்த பெண்ணுக்கு தமிழ்நாட்டில் முதுகெலும்பு வளைவு சிகிச்சை

அத்துடன் கடுமையான ஸ்கோலியோசிஸ் இதய, நுரையீரல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதில் 35 டிகிரிக்கு மேல் வளைவு ஏற்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த சிக்கலைத் தீர்க்கப் பாரம்பரியமாக இணைப்பு முறையிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், உலோக இணைப்பு அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இணைப்பு இல்லாத ஸ்கோலியோசிஸ் அறுவை சிகிச்சை, வேகமான முதுகெலும்பு வளர்ச்சி மற்றும் இயக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வழக்கமான இணைப்புடன் கூடிய சிகிச்சை நீளத்தின் வளர்ச்சியைக் குறைக்கிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்த அந்த 42 வயதான அமெரிக்கப் பெண் ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை குறித்து பேசிய சஜன் கே ஹெக்டே , “உலோக இணைப்பு இல்லாத முதுகெலும்பு வளைவுத் திருத்த அறுவை சிகிச்சை குறைந்த நேரத்தில், குறைந்த ஊடுருவல் முறையில், குறைந்த செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

பிற்காலத்தில் முதுகுவலி வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. இந்த நுட்பத்தை இப்போது இடியோபதிக் ஸ்கோலியோசிஸிலும் பயன்படுத்தலாம். அதில், ஒரு நெகிழ்வான இழையைப் பயன்படுத்தி சிதைவு சரி செய்யப்படுகிறது. இந்த நோயாளிகள் முழு இயல்பு நிலைக்கு விரைவாகத் திரும்பி, இதனால் ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து விடுபட முடியும் ” என்றார்.
அறுவை சிகிச்சை முடிந்தப் பின்னர், அமெரிக்கப் பெண் இப்போது பிசியோதெரபி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது முதுகுத் தோற்ற நிலை, அவரது விலா எலும்பு, தண்டுப் பகுதி, தோள்கள் சீரான நிலைக்குத் திரும்பி மேம்பட்டு வருகிறது.

அவர் சாதாரண அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்குத் திரும்பியுள்ளதுடன், இந்த வாரம் அமெரிக்காவிற்குத் திரும்பவுள்ளார்.

இதையும் படிங்க: தண்டுவட பாதிப்பால் அவதிப்பட்ட நபரை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திய அப்போலோ மருத்துவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.