ETV Bharat / state

அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை தொடக்கம்! - corona updates in tamil

சென்னை: அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதலமைச்சர் இன்று தொடக்கி வைத்தார்.

சென்னையில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட் நடமாடும் வாகன சேவை தொடக்கம்!

author img

By

Published : May 11, 2020, 5:57 PM IST

Updated : May 11, 2020, 10:09 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் ஐந்து கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய், கரோனாவால் ஏற்படும் நெஞ்சக தொற்றுநோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தார்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் (Chronic Obstructive Pulmonary Disease), தொழிற்சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.

சென்னையில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை தொடக்கம்!

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்: சூடு பிடிக்கும் இளநீர் வியாபாரம்!

Last Updated : May 11, 2020, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.