சென்னை அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள நீர்நிலைகளில் மழைநீரை சேமிக்கும்வகையில் ஏரி, குளங்களைத் தூர்வாரி கரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சுமார் 6.65 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறவுள்ள இந்தப் பணியினை சிறப்பு பூஜையோடு அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்எல்ஏ, "முதல்கட்டமாக அம்பத்தூர், கொரட்டூர், கருக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்து குளங்களைத் தூர்வாரி கரை அமைப்பதோடு, நடைபாதை அமைக்கப்படவுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கவும் அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
அம்பத்தூர் ஏழாவது மண்டலத்தில் எதிர்வரும் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும், கடந்தாண்டே இங்கு 36 ஆழ்துளைக் கிணறுகள், குடிநீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவை ஸ்டாலின் நடத்தவில்லை; பிரசாந்த் கிஷோர்தான் நடத்துகிறார்' - அமைச்சர் காமராஜ்