ETV Bharat / state

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு!

சென்னை: கோடை விடுமுறை முடிந்து வந்த மாணவர்கள், ஆசிரியர்களை மேளதாளம் முழங்க, சகல மரியாதையுடன் முன்னாள் மாணவர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அசத்திய முன்னாள் மாணவர்கள்
author img

By

Published : Jun 4, 2019, 10:36 AM IST

சென்னை முகப்பேரில் கிழக்கு மறைமலையடிகளார் சாலையில் அரசினர் ஆண்கள் பள்ளி உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்பு நேற்று (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப்பள்ளியைப் பொறுத்தளவில் இந்த ஆண்டு புதியதாகப் பல குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.

கோடை விடுமுறை முடிந்து வரும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களை உற்சாகப்படுத்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்-பெற்றோர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மங்கள இசையுடன் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும், பட்டாசு வெடித்து சகல மரியாதையுடன் மாணவர்கள், ஆசிரியர்களை வரவேற்றனர்.

அசத்திய முன்னாள் மாணவர்கள்
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், பள்ளியின் முன்னேற்றத்திற்கு அனைத்து செலவுகளும் முன்னாள் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறினார். அதில், முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் தான் தருவதாகத் தெரிவித்தார்.

புதிய கல்வி ஆண்டில் பயில வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு - அசத்திய முன்னாள் மாணவர்கள் .

சென்னை முகப்பேரில் கிழக்கு  
மறைமலையடிகளார் சாலையில் அமைந்துள்ள அரசினர் ஆண்கள் பள்ளி உள்ளது.  கோடை விடுமுறைக்குப் பின்பு இன்று (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடக்கப்பள்ளியைப் பொறுத்தளவில் இந்த ஆண்டு புதியதாக பல குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். முதல்முறையாக கல்வி பயில பெற்றோரிடம் இருந்து பள்ளிச்சூழலுக்கு வரும் இவர்களை உற்சாகப்படுத்தி, கவுரவிக்கவும், கோடை விடுமுறை முடிந்து வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆகிரியர்களை உற்சாக படுத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெற்றோர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன் படி மங்கள இசையுடன் மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும்,  பட்டாசு வெடிக்க சகல மரியாதையுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். 
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர்:பள்ளியின் முன்னேற்றத்திற்கு அனைத்து செலவுகளும் முன்னாள் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென சைதை துரைசாமி கூறினார் அதில் முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் நான் தருவதாக கூறியுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.