சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 11ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கு சுற்றுலாத்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்த செய்திகுறிப்பில்,
"அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 15 நாட்களுக்கு நடைபெறும். 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் 55 பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பைக் வீலிங்... 2 பேர் கைது... முக்கிய குற்றவாளியை பிடிக்க ஹைதராபாத் விரைந்த தனிப்படை...