ETV Bharat / state

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிற மாவட்ட மக்களுக்கு அனுமதியளிக்க உத்தரவு - சென்னை

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chidambaram arudra dharsan
chidambaram arudra dharsan
author img

By

Published : Dec 27, 2020, 8:18 PM IST

Updated : Dec 27, 2020, 8:48 PM IST

சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் கடலூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் அமர்வில் இன்று சிறப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொளளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிற மாவட்ட பக்தர்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பதற்கு பதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் தனி மனித விலகல் நடைமுறைகளை பின்பற்றி கூட்டத்தை முறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும், ஏற்கனவே பிற மாவட்டங்களுக்கு பயணிக்க பின்பற்றப்பட்ட இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன, பிற மாவட்ட மற்றும் பிற மாநில பக்தர்களுக்கு தனி மனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆருத்ரா தரிசன மகோத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் ஏதும் அரசுக்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலத்திற்குள்ளும் மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மத விவகாரங்களில் காரணமற்ற கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது எனக் கூறி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறியுள்ளபடி, பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரையும், 4.30 மணி முதல் 5.30 மணி வரையும், 6 முதல் 7 மணி வரையும் தலா 200 பக்தர்கள் வீதம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் எனவும், பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி, கரோனா அறிகுறி இல்லாவிட்டால் அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Last Updated : Dec 27, 2020, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.