சென்னை: தமிழக அரசு வெளியிட்டு உள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 525 நூலகங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
முதல் கட்டமாக 2021 மற்றும் 22-ஆம் ஆண்டில் 4 ஆயிரத்து 116 நூலகங்களை புதுப்பிக்க 91 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 808 நூலகங்களை புதுப்பிக்க 84 கோடியே 27 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து மீதமுள்ள நூலகங்கள் 2024-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூகுளுக்கு ரூ.3200 கோடி அபராதம்; இருப்பிட தரவு கண்காணிப்பு வழக்கில் அதிரடி!