ETV Bharat / state

மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரண நிதி:  அரசு பரிசீலிக்க உத்தரவு - undefined

சென்னை: நல வாரியத்தில் பதிவுசெய்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

All registered Transperson will get corona relief fund very soon, state report, MHC

author img

By

Published : Jun 14, 2021, 10:32 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாயையும் வழங்கியுள்ளது.

ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், 4,000 ரூபாய் நிவாரண உதவியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கான நல வாரியத்தில் பதிவுசெய்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டாக வாரியம் செயல்படாததால், ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதால், நல வாரியத்தில் விண்ணப்பித்துள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இது குறித்து பரிசீலிப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.

இதைப் பதிவுசெய்து நீதிபதிகள், நல வாரியத்தில் மே 31ஆம் தேதிக்கு முன் விண்ணப்பித்த அனைத்து மூன்றாம் பாலினத்தவர்களுக்கும், ஏற்கெனவே, பதிவுசெய்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.