இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக, நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களை வழங்க, மே 2 ,3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கவும் தொடர்ந்து 4ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தினசரி 200 பேருக்கு தனிமனித இடைவெளியை கடைபிடித்து ரேஷன் பொருள்கள் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அரசின் அறிவிப்பின்படி விரைவாக அனைத்து மக்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கும் வகையில் வரும் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் மே 22ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:முட்டையுடன் கூடிய விலையில்லா உணவு வழங்கிய அமைச்சர் துரைக்கண்ணு