சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், வழக்கறிஞர் பாபுமுருகவேல் பங்கேற்றுள்ளனர்.
திமுக சார்பில் என்.ஆர்.இளங்ஜோ, கிரிராஜன் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏழுமலை, காங்கிரஸ் சார்பில் நவாஸ்கான், தேமுதிக சார்பில் மோகன்ராஜ், பாஜக சார்பில் குமரகுரு, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் விவாதிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்படும்.
இதையும் படிங்க:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறைச்செயலர் ஆஜாராக வேண்டும் - உயர் நீதிமன்றம்!