தமிழ்நாட்டில் காற்றைவிட வேகமாக பரவும் கரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்தவகையில், 10ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாகவும், ஊரடங்கு குறித்தும் இன்று அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இதில், கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், ரயில் போக்குவரத்தை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக, தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் சில தளர்வுகளை பயன்படுத்தி ஊரடங்கு விதிகளை மக்கள் மீறுவதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இனி வரும் காலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் கடுமையாக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.