சென்னை: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று (டிச. 30) மாலை வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் மை.பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் பிரேம் மற்றும் பக்ஸ் ஆகியோரின் கதாபாத்திரமும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரின் கதாபாத்திரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்று மாலை துணிவு படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியல் திவ்யாவின் ட்ரெண்டிங் போட்டோ கலெக்ஷன்ஸ்